இடம்பெயர்கிறது வணிகவரி அலுவலகம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட வணிகவரி அலுவலகம் ராஜபாளையத்துக்கு மாற்றுவதால் ஸ்ரீவில்லிபுத்துார் மட்டுமின்றி வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில், மல்லி உட்பட பல்வேறு பகுதி வியாபாரிகள், தொழில் முனைவோர்கள்பாதிக்கின்றனர் .

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே 2 மாடிகளுடன் கட்டபட்ட கட்டடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில்ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் வணிகவரி அலுவலகங்கள் செயல்படவுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் அலுவலக ஆவணங்கள் இடமாற்றம் செய்யபட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் முழு அளவில் இடம் பெயர்கிறது.இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் வத்திராயிருப்பு தாலுாகா பகுதி வியாபாரிகள், தொழிலதிபர்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ., கவனத்திற்கு: ஸ்ரீவில்லிபுத்துாரில் கிருஷ்ணன்கோயில் தெருவிலுள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம் அருகில் பழைய நீதிமன்ற கட்டடம், தாலுகா அலுவலகத்தில் காலியாக கிடக்கும் இடம் என பல இடங்கள் இருக்கும்நிலையில் அங்கு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி ஸ்ரீவில்லிபுத்துார் அலுவலகம் இடம் மாறாமல் இருக்க எம்.எல்.ஏ.,சந்திரபிரபா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment