சாத்துார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்துார் : சாத்துார் அருகே இரவார்பட்டி அனில் பயர் ஒர்க்சில் கருந்திரி வெட்டிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இதை தொடர்ந்து ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி சேர்ந்தவர் பாலாஜி பவன், ராஜேஷ்.இவர்களுக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ்பட்டாசு தொழிற்சாலை இரவார்பட்டியில் உள்ளது. அங்கு அறைகளில் சரவெடி தயாரிக்கப்படுகிறது. நேற்று காலை 9:30 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் அறைக்கு வெளியே காய்ந்து கொண்டிருந்த பட்டாசுக்கான கருந்திரியை இரவார்பட்டி சேர்ந்த ஊர் தேவன் 42, சிறு துண்டுகளாக வெட்டினார். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது. ஊர் தேவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

இதனிடையே இங்கு பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை முதன்மை அலுவலர் சுந்தரேசன் ஆலையை ஆய்வு செய்தார். விதிமீறலால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து ஆலை உரிமத்தை ரத்து செய்தார்.

Related posts

Leave a Comment