9500 பேருக்கு பென்ஷன் ; அமைச்சர் பெருமிதம்

சிவகாசி : சிவகாசி தொகுதியில் 9500 பேருக்கு முதியோர் பென்ஷன் வாங்கி தந்துள்ளதாக அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வரும் அவர் ஆலமரத்துபட்டியில் குறைகளை கேட்டறிந்து மக்களிடம் மனு வாங்கினார். அங்கு அமைச்சர் பேசியதாவது: சிவகாசி தொகுதியில் 9500 பேருக்கு முதியோர் பென்ஷன் ,10 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்துள்ளேன். ஆலமரத்துப்பட்டியில் புதிய ரேஷன் கடை, மயானத்திற்கு ரோடு அமைத்துக் கொடுக்கப்படும் ,என்றார். சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட திட்ட அலுவலர் ஜெயக்குமார், ஒன்றிய பொறியாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, மருத்துவ அணி செயலாளர் விஜய்ஆனந்த், ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment