பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்… விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது அரசு -துரைமுருகன்

சென்னை: விவசாய பெருங்குடி மக்களுக்கு பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் என்ற அறிவிப்புக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 20 மணி நேரமாவது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். பகலில் 6 மணி நேரம் இலவச மின்சாரம் பகலில் 6 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு அடுத்த கட்ட துரோகத்தைச் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த அறிவிப்புக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு முன் நடத்தப்படும் பரிசோதனை ஓட்டமா? அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்குச் செய்துள்ள அடுத்தகட்டத் துரோகம் இது. 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு…

Read More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு! முதலமைச்சர் ஆலோசனை!

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அவை மீண்டும் எப்போது திறக்கப்படும் என பல்வேறு எதிர்பார்ப்புகளும், குழப்பங்களும் நீடித்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் 16 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு குறித்து தமிழக முதலமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் பரவிய கொரோனா நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதியன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியில் தற்போது வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் மாநில, ஒன்றிய பிரதேச…

Read More

தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம்: கமல் பேட்டி

சென்னை:”சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம்,” என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்தார். சென்னையில் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது தெம்பாக இருந்தது. அரசியல் குறித்து ரஜினியும் நானும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியலைவிட அவரது உடல் நலனே முக்கியம். அரசியல் நிலைபாடு பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம். யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்ல.3வது அணி அமைந்துவிட்டது என சொல்கிறேன். நல்லவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். நல்லவர்கள் மற்ற கட்சிகளிலும் உள்ளனர். அவர்களை அழைக்கிறேன். நல்லவர்கள் சேரும்போது 3வது அணியாக இருக்காது, முதல் அணியாக இருக்கும். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மையத்தின்…

Read More

பருவநிலை மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு

புதுடில்லி: பிரிட்டனில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிச.12ல் ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ எனப்படும் பருவநிலை தொடர்பான மாநாடு நடக்கவுள்ளது.புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைக்க விரும்பும் உலக நாடுகளின் தலைவர்களுக்காக இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா பிரிட்டன் வெளியுறவு துறை செயலர் பிலிப் பார்டனை லண்டனில் சந்தித்துபேசினார். அப்போது அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக அந்த மாநாடு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More

ஜனாதிபதி ராம்நாத்துடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

புதுடில்லி: டில்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால், நவ.,4ல் டில்லிக்கு சென்றார். அன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரையும் சந்தித்தார். நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்த பன்வாரிலால், தமிழக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று(நவ.,6) ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத்தை சந்தித்து, பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார்.

Read More

மூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா?

நரிக்குடி, நவ. 2–கொரோனா ஊரடங்கு தளர்வால் பொழுது போக்கு பூங்காக்களை நவ., 10 முதல் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே ஏழு மாதமாக மூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். கொரோனா தொற்று பரவலால் சிறுவர் முதல் முதியவர் வரை பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். சிறுவர் பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, அம்மா பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டன. ஏழு மாதமாக மூடப்பட்டிருக்கும் பூங்காக்களில் புதர் மண்டி காடானது. விஷ ஜந்துக்களின் புகலிடமானது. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகிறது.பூங்காக்களை புரனமைக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வரவில்லை. நவ., 10 முதல் ஊரடங்கு தளர்வுகளுடன் பொழுது போக்கு பூங்காக்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றை திறப்பதற்கு முன் பூங்காக்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிதிச்சுமையை…

Read More

குத்து விளக்கு பூஜை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே மெட்டுக்குண்டு உச்சினி மகா காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை பெய்யவும், மக்கள் நோயின்றி வாழவும் பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன.

Read More

விருதுநகரில் வேல் யாத்திரை; நயினார் நாகேந்திரன் தகவல்

விருதுநகர் : ”விருதுநகரில் வேல் யாத்திரை டிச.,2ல் நடக்கிறது,” என பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். விருதுநகரில் வேல் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: விருதுநகரில் டிச.,2ல் நடக்கும் வெற்றிவேல், வீரவேல் யாத்திரையில் மாநில தலைவர் முருகன், டிச., 6ல் திருச்செந்துாரில் நடக்கும் யாத்திரையில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கின்றனர். இந்த யாத்திரை முடிந்த பிறகு பா.ஜ., ஆட்சி மலரும். வேல் யாத்திரை வெற்றி பெறுவது குறித்து தகவல் தொழில்நுட்ப அணி இணைய தலம் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். என்றார்.நிர்வாகிகள் கஜேந்திரன், பொன்ராஜன், கரந்தமலை, ராஜ்குமார், வெற்றிவேல், சசிராமன், பார்த்தசாரதி, ராமஜெயம், சந்திரன், ஈஸ்ரவன் பங்கேற்றனர்.பா.ஜ., மகளிரணி தலைவி காளீஸ்வரி தலைமையில் தி.மு.க.,வை சேர்ந்த 55 பெண்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.

Read More