ஜனாதிபதி ராம்நாத்துடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

கவர்னர், பன்வாரிலால், பன்வாரிலால்புரோஹித், ஜனாதிபதி, ராம்நாத்கோவிந்த்,

புதுடில்லி: டில்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால், நவ.,4ல் டில்லிக்கு சென்றார். அன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரையும் சந்தித்தார்.

latest tamil news

நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்த பன்வாரிலால், தமிழக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று(நவ.,6) ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத்தை சந்தித்து, பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார்.

Related posts

Leave a Comment