பருவநிலை மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு

PM Modi, UK, invites, Narendra modi, Climate Ambition Summit 2021, நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: பிரிட்டனில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிச.12ல் ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ எனப்படும் பருவநிலை தொடர்பான மாநாடு நடக்கவுள்ளது.புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைக்க விரும்பும் உலக நாடுகளின் தலைவர்களுக்காக இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா பிரிட்டன் வெளியுறவு துறை செயலர் பிலிப் பார்டனை லண்டனில் சந்தித்துபேசினார். அப்போது அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக அந்த மாநாடு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment