மூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா?

நரிக்குடி, நவ. 2–கொரோனா ஊரடங்கு தளர்வால் பொழுது போக்கு பூங்காக்களை நவ., 10 முதல் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே ஏழு மாதமாக மூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கொரோனா தொற்று பரவலால் சிறுவர் முதல் முதியவர் வரை பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். சிறுவர் பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, அம்மா பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டன. ஏழு மாதமாக மூடப்பட்டிருக்கும் பூங்காக்களில் புதர் மண்டி காடானது. விஷ ஜந்துக்களின் புகலிடமானது. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகிறது.பூங்காக்களை புரனமைக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வரவில்லை.

நவ., 10 முதல் ஊரடங்கு தளர்வுகளுடன் பொழுது போக்கு பூங்காக்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றை திறப்பதற்கு முன் பூங்காக்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிதிச்சுமையை காரணம் காட்டி பூங்காக்களை புனரமைக்காமல் இருந்து விடக்கூடாது

ஊரக வளர்ச்சி முகமை நிதி

சிறுவர் பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்டவைகளை பல மாதங்களாக பராமரிக்காமல் விட்டதால் தூசி படிந்து, ரூ.பல லட்சம் மதிப்புள்ள துருப்பிடித்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பொதுநலன் கருதி ஊரக வளர்ச்சி முகமை நிதியை பயன்படுத்தி பூங்காக்களை பராமரிக்க வேண்டும்.மாரீஸ்வரன், சமூக ஆர்வலர், நரிக்குடி.

Related posts

Leave a Comment