தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு! முதலமைச்சர் ஆலோசனை!

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அவை மீண்டும் எப்போது திறக்கப்படும் என பல்வேறு எதிர்பார்ப்புகளும், குழப்பங்களும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நவம்பர் 16 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு குறித்து தமிழக முதலமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதியன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியில் தற்போது வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் மாநில, ஒன்றிய பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்து வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தமிழக அரசு தொடர்ந்து பள்ளிகளைத் திறப்பதில் காலதாமதம் செய்து வருகிறது.

தமிழக அரசு அதிரடி இதனிடையே, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகளவிலிருந்ததால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, நவம்பர் 16ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

Related posts

Leave a Comment