பட்டாசு தடையை நீக்குங்க ; சன் இந்தியா குரூப் அதிபர் வலியுறுத்தல்

சிவகாசி : பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க கோரி ராஜஸ்தான், ஒடிசா அரசுகள் முன் வர வேண்டும் என சிவகாசி சன் இந்தியா குரூப் ஆப் கம்பெனி அதிபர் பிரம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை : கொரோனா தொற்றால் தொடர்ந்து 50 நாட்கள் பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடு கையில் இந்தாண்டு 70 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தீபாவளிக்காக இந்தியா முழுவதும் அனுப்படுகிறது. ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு விற்க, வெடிக்க அரசு தடை விதித்துஉள்ளது. இதனால் பட்டாசு தொழில் , தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதல்வர் பழனிசாமி கவனத்திற்கு எடுத்து சென்றார். முதல்வர் பழனிசாமி உடனடியாக பட்டாசு தடை செய்த மாநில முதல்வர்களுக்கு தடையை நீக்க கோரி கடிதம் எழுதி உள்ளார். அதன்படி பட்டாசு தொழிலை பாதுகாக்க தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தடையை நீக்க அந்தந்த மாநில அரசுகள் முன் வர வேண்டும்,என்றார்.

Related posts

Leave a Comment