வந்தாச்சு இந்திய பொம்மைகள் சீன பொம்மைகளுக்கு குட்பை

விருதுநகர்பெரும்பாலான தரமற்ற பொருட்கள் , பொம்மைகள் சீனாவிலிருந்தே இறக்குமதியாகின்றன. இதன் வருகையால் இந்திய கைவினை, பொம்மை உற்பத்தி செய்வோர் வர்த்தகம் கடுமையான நெருக்கடியை சந்திக்கிறது. தற்போது தான் மத்திய அரசு சீன அரசின் எதேச்சதிகார போக்கை கண்டித்து சீன செயலிகளை தடை செய்துள்ளது. மக்களும் சீன பொருட்களுக்கு மாற்றாக இந்திய பொருட்கள், தயாரிப்புகள் வாங்க துவங்கி உள்ளனர். அந்த வகையில் சீனா பொம்மைகளை விற்கமாட்டேன் இந்தியா பொம்மைகளை தான் விற்பேன் என்ற மன உறுதியோடு விருதுநகர் தெற்கு ரத வீதியை சேர்ந்த சங்கரி இப்தியாவில் உற்பத்தியாகும் மரபொம்மைகளை விற்பனை செய்து வருகிறார். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மரத்தில் பொம்மைகள் தயாரிப்பது என்பது மிகவும் எளிதான விஷயம் இல்லை. இப்பொம்மைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன் தரமாகவும் இருக்கின்றன. ரூ.150 முதல் 700 வரை…

Read More

ஒரே நாளில் 6 ஆயிரம் மரக்கன்று: மெப்கோ கல்லுாரியில் ‘மியாவாகி’

சிவகாசிநாளைய உலகில் மனித சமுதாயம் செம்மையாக வாழ காடுகளின் பங்கு மிக முக்கியம். அதற்காக நாம் தற்போதே அதற்குரிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மழை பொழிய , நகரை மாசில்லாதாக மாற்ற மரங்கள் அவசியம்.இதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரியில் மிக உன்னதமான முயற்சி எடுக்கப்பட்டது. ஆக. 15 ல் ஒரே நாளில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாகி முறையில் நடப்பட்டது.நாட்டிலேயே முதன் முதலாக ஒரே நாளில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இக்கல்லுாரி சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் கல்லுாரியில் மியாவாகி முறையில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. கல்லுாரி நிர்வாக குழு துணை செயலாளர் குணசிங் செல்லதுரை துவக்கி வைத்தார். இதற்காக இரு ஆண்டுகளுக்கு முன்னரே முறையாக திட்டமிடப்பட்டு இந்நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

Read More

அவசியமாகிறது ! சேய்கிராமங்களுக்கு நகரும் ரேஷன்கடைகள்…. பல கி.மீ., நடக்கும் மக்களுக்கு தேவை தீர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : , நவ.1-மாவட்டத்தில் அமல்படுத்தபட்டுள்ள நகரும் ரேஷன்கடை திட்டத்தினை ரேஷன் பொருளுக்காக பல கி.மீ., நடக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சேய்கிராமங்களுக்கும் சென்றடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டும். .மாவட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகர்புறத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் எளிதில் வாங்கும் விதத்தில் ரேஷன்கடைகள் அமைந்துள்ளன. ஆனால் உள்ளாட்சிகளில் தாய்கிராமங்களில் மட்டுமே இருக்கும் ரேஷன்கடைகளில் சேய்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சில கி.மீ.,துாரம் நடந்து சென்று பொருட்களை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாங்கி வருகின்றனர். இதனால் சேய்கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், முதிர்ந்தவர்கள், சைக்கிள் மற்றும் டுவீலர்கள் இல்லாதவர்கள் உணவுப்பொருட்களை தலையில் சுமந்து தட்டுத்தடுமாறி வாங்கி வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது நகரும் ரேஷன்கடை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளது. இத்திட்டம் சேய்கிராம பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக…

Read More

ராம்கோ ஐ.டி.ஐ.,க்கு ரூ.2 கோடி

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ., தொடர் செயல்பாட்டை பாராட்டி மத்திய அரசு ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக, ராம்கோ தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் தெரிவித்தார். ராஜபாளையத்தில் நடந்த ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விழாவில் அவர் பேசியதாவது: தொடக்கம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து விருதுகள் பெற்று வருவதால் மத்திய அரசின் ஸ்டிரைவ் பிராஜக்ட்’மூலம் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. இதனால் பயிற்சி மைய உள்கட்டமைப்பு மற்றும் தரம் உயரும்,என்றார். ராஜபாளையம் மில்ஸ் தலைமை நிதி அலுவலர் ஞானகுருசாமி தொடங்கி வைத்தார். ஐ.டி.ஐ முதல்வர் மாடசாமி வரவேற்றார். பயிற்சி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Read More