அவசியமாகிறது ! சேய்கிராமங்களுக்கு நகரும் ரேஷன்கடைகள்…. பல கி.மீ., நடக்கும் மக்களுக்கு தேவை தீர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : , நவ.1-மாவட்டத்தில் அமல்படுத்தபட்டுள்ள நகரும் ரேஷன்கடை திட்டத்தினை ரேஷன் பொருளுக்காக பல கி.மீ., நடக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சேய்கிராமங்களுக்கும் சென்றடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டும்.

.மாவட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகர்புறத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் எளிதில் வாங்கும் விதத்தில் ரேஷன்கடைகள் அமைந்துள்ளன. ஆனால் உள்ளாட்சிகளில் தாய்கிராமங்களில் மட்டுமே இருக்கும் ரேஷன்கடைகளில் சேய்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சில கி.மீ.,துாரம் நடந்து சென்று பொருட்களை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாங்கி வருகின்றனர். இதனால் சேய்கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், முதிர்ந்தவர்கள், சைக்கிள் மற்றும் டுவீலர்கள் இல்லாதவர்கள் உணவுப்பொருட்களை தலையில் சுமந்து தட்டுத்தடுமாறி வாங்கி வருகின்றனர்.

மாவட்டத்தில் தற்போது நகரும் ரேஷன்கடை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளது. இத்திட்டம் சேய்கிராம பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும் அனைத்து சேய்கிராமத்திற்கும் செயல்பாட்டுக்கு வராததால் மக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாதநிலை காணப்படுகிறது. இதை தவிர்க்க சரியான திட்டமிடலுடன் அனைத்து சேய்கிராமங்களிலும் நகரும் ரேஷன்கடை திட்டத்தை கொண்டு வருவது மிகவும் அவசியமாகிறது.சிறப்பாக செயல்படும்தற்போது ரேஷன் பொருட்கள் வாங்க முதியவர்கள், பெண்கள் தான் அதிகளவில் சென்று வருகின்றனர்.

இதில் பல கடைகள் துாரமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து சென்று வாங்கி வரும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நகரும் ரேஷன்கடைகள் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் தேவையுள்ள அனைத்து சேய்கிராமங்களிலும் இத்திட்டத்தை கொண்டு வந்தால் சிறப்பாக செயல்படும்.-சுபாஷ், ரெங்கப்பநாயக்கர்பட்டி.

Related posts

Leave a Comment