ஒரே நாளில் 6 ஆயிரம் மரக்கன்று: மெப்கோ கல்லுாரியில் ‘மியாவாகி’

சிவகாசிநாளைய உலகில் மனித சமுதாயம் செம்மையாக வாழ காடுகளின் பங்கு மிக முக்கியம்.

அதற்காக நாம் தற்போதே அதற்குரிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மழை பொழிய , நகரை மாசில்லாதாக மாற்ற மரங்கள் அவசியம்.இதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரியில் மிக உன்னதமான முயற்சி எடுக்கப்பட்டது. ஆக. 15 ல் ஒரே நாளில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாகி முறையில் நடப்பட்டது.நாட்டிலேயே முதன் முதலாக ஒரே நாளில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இக்கல்லுாரி சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் கல்லுாரியில் மியாவாகி முறையில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. கல்லுாரி நிர்வாக குழு துணை செயலாளர் குணசிங் செல்லதுரை துவக்கி வைத்தார். இதற்காக இரு ஆண்டுகளுக்கு முன்னரே முறையாக திட்டமிடப்பட்டு இந்நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment