ராம்கோ ஐ.டி.ஐ.,க்கு ரூ.2 கோடி

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ., தொடர் செயல்பாட்டை பாராட்டி மத்திய அரசு ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக, ராம்கோ தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் தெரிவித்தார்.

ராஜபாளையத்தில் நடந்த ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விழாவில் அவர் பேசியதாவது: தொடக்கம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து விருதுகள் பெற்று வருவதால் மத்திய அரசின் ஸ்டிரைவ் பிராஜக்ட்’மூலம் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. இதனால் பயிற்சி மைய உள்கட்டமைப்பு மற்றும் தரம் உயரும்,என்றார். ராஜபாளையம் மில்ஸ் தலைமை நிதி அலுவலர் ஞானகுருசாமி தொடங்கி வைத்தார். ஐ.டி.ஐ முதல்வர் மாடசாமி வரவேற்றார். பயிற்சி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment