மழையால் குல்லூர் சந்தைக்கு நீர்வரத்து

சிவகாசி : சிவகாசி பா.ஜ., சார்பில் காரனேசன் காலனியில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். வர்த்தக பிரிவு நகர தலைவர் பாண்டியன் பேசினார். வர்த்தக பிரிவு வாசிப்பன், அறிஞர் பிரிவு தலைவர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மகளிரணி சந்தனகுமாரி, முத்துலட்சுமி, ஊடக பிரிவு ஆறுமுகச்சாமி, நகர பொது செயலாளர் காசி வகஸ்வநாதன், சரவணன், நகர பொருளாளர் உதயசூரியன், முத்துராஜ், திருவேங்கடராமானுஜம் கலந்து கொண்டனர்.

Read More

விருச்சாசனத்தில் சாதித்த பள்ளி மாணவர்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடைபெற்ற குலோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் டால்வின் ராஜ் 15,ஒன்றரை மணி நேரம் 2 அடி உயர செங்கல் மீது விருச்சாசனத்தில் நின்று சாதனை படைத்துள்ளார் . ராஜபாளையம் தனியார் பயிற்சி மையத்தில் யோகா பயின்று வரும் இவர் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஒற்றை காலில் நிற்கும் சாதனையை முறியடிக்கும் விதமாக 7 செங்கற்களின் மீது 1 மணி 30 நிமிடங்கள் அசையாமல் ஒற்றை காலில் நின்று விருச்சாசனத்தை செய்து சாதனை படைத்தார்.குலோபல் அமைப்பை சார்ந்த நிர்மல் குமார் மற்றும் நடுவர்கள் சாதனையை பதிவு செய்தனர். தென்காசி எம்.பி., தனுஷ் குமார் நேரில் பரிசு வழங்கினார்.

Read More

இலவச பயிற்சிக்கு அழைப்பு

விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(நவ. 10) முதல் டிச. 31 வரை ஆன்லைனில் தினசரி காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது. பயிற்சி பெற விரும்புவோர் 86438 62299, 77083 93991 வாட்ஸ் ஆப் வாயிலாக பெயரை அனுப்பி பதிவு செய்ய வேண்டும், என்றார்.

Read More