விருச்சாசனத்தில் சாதித்த பள்ளி மாணவர்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடைபெற்ற குலோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் டால்வின் ராஜ் 15,ஒன்றரை மணி நேரம் 2 அடி உயர செங்கல் மீது விருச்சாசனத்தில் நின்று சாதனை படைத்துள்ளார் .

ராஜபாளையம் தனியார் பயிற்சி மையத்தில் யோகா பயின்று வரும் இவர் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஒற்றை காலில் நிற்கும் சாதனையை முறியடிக்கும் விதமாக 7 செங்கற்களின் மீது 1 மணி 30 நிமிடங்கள் அசையாமல் ஒற்றை காலில் நின்று விருச்சாசனத்தை செய்து சாதனை படைத்தார்.குலோபல் அமைப்பை சார்ந்த நிர்மல் குமார் மற்றும் நடுவர்கள் சாதனையை பதிவு செய்தனர். தென்காசி எம்.பி., தனுஷ் குமார் நேரில் பரிசு வழங்கினார்.

Related posts

Leave a Comment