ஐபிஎல் முடிஞ்சாச்சு… ஆஸ்திரேலியாவை ஒரு கை பாக்கப் போறோம்… பயணத்தை துவக்கிய இந்திய அணி!

துபாய் : இரண்டு மாத காலமாக ஐபிஎல் 2020 தொடரையொட்டி யூஏஇயில் முகாமிட்ட இந்திய அணியினர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு தங்களது பயணத்தை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் மேற்கொண்டனர். சிட்னி செல்லும் இந்திய அணியினர் அங்கு 14 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு இடையில் பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளனர். விறுவிறுப்புடன் நடந்த தொடர் ஐபிஎல் 2020 போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ம் தேதி துவங்கி கடந்த 10ம் தேதி வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஆனால் குவாரன்டைன் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே யூஏஇ பயணத்தை இந்திய அணியினர் மேற்கொண்டனர். பயணத்தை துவக்கிய இந்திய அணி இந்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா மோதவுள்ளது. வரும் 27ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடருக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள்…

Read More

பீகார் மேட்டர் ஓவர்.. மேற்கு வங்கத்துக்கு அமித் ஷா போட்ட பிளான்.. கலக்கத்தில் மம்தா!

கொல்கத்தா: பீகாரில் பல்வறு கருத்துக்கணிப்புகளில் பாஜக-ஜேடியு கூட்டணி கண்டிப்பாக தோற்கும் என்று கூறப்பட்டது. இதை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்றுள்ளது பாஜக. அடுத்ததாக மேற்கு வங்க மாநிலத்தை குறிவைத்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி கலக்கத்தில் உள்ளார். 50 வருடங்களுக்கு மேலாக இடதுசாரி கொள்கையில் ஊறிப்போனது மாநிலம் மேற்கு வங்கம்., என்னதான் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், இடதுசாரி கொள்கைதான் அங்குள்ள அரசியல் கட்சிகளால் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அங்கு முதல்முறையாக வலது சாரி கொள்கை உள்ள பாஜக வெல்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல், மத்திய பிரதேசத்தில் ஆட்சியைதீர்மானிக்கும் இடைத்தேர்தல், குஜராத் சட்டசபை இடைத்தேர்தல், கர்நாடகா, தெலுங்கானாவில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் என பெரும்பாலானவற்றை பாஜக தான் வென்று சாதித்துள்ளது.

Read More

சதுரகிரியில் இன்று முதல் அனுமதி

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர். அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாளிலிருந்து 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவது வழக்கம். நவ.14ல் வரும் அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். முதியவர்கள், குழந்தைகள், நோய்பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும், பக்தர்கள் முகக்கவசமணிந்து வரவேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்திஉள்ளது.

Read More