ஐபிஎல் முடிஞ்சாச்சு… ஆஸ்திரேலியாவை ஒரு கை பாக்கப் போறோம்… பயணத்தை துவக்கிய இந்திய அணி!

துபாய் : இரண்டு மாத காலமாக ஐபிஎல் 2020 தொடரையொட்டி யூஏஇயில் முகாமிட்ட இந்திய அணியினர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு தங்களது பயணத்தை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் மேற்கொண்டனர். சிட்னி செல்லும் இந்திய அணியினர் அங்கு 14 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு இடையில் பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளனர்.

விறுவிறுப்புடன் நடந்த தொடர்

விறுவிறுப்புடன் நடந்த தொடர் ஐபிஎல் 2020 போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ம் தேதி துவங்கி கடந்த 10ம் தேதி வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஆனால் குவாரன்டைன் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே யூஏஇ பயணத்தை இந்திய அணியினர் மேற்கொண்டனர்.

பயணத்தை துவக்கிய இந்திய அணி

பயணத்தை துவக்கிய இந்திய அணி இந்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா மோதவுள்ளது. வரும் 27ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடருக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் நேற்றிரவு தங்களது பயணத்தை துவக்கியுள்ளனர்.

இடையில் பயிற்சி

இடையில் பயிற்சி சத்தீஸ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்களும் யூஏஇக்கு கடந்த வாரங்களில் வந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு பயணத்தை துவக்கியுள்ளனர். நேரடியாக சிட்னி செல்லும் இந்திய அணி வீரர்கள் அங்கு 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளனர். இடையில் பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

27ம் தேதி துவக்கம்

27ம் தேதி துவக்கம் வரும் 27ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில், வரும் டிசம்பர் 8ம் தேதி வரை ஒருநாள் தொடர், டி20 தொடர் நடைபெறவுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. முதல் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

Related posts

Leave a Comment