ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க!

சென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த ஆண்டுக்கான ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து நேரடியாக ஊழியராகலாம். இதற்கான அறிவிப்பு நவம்பர் 11-ஆம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் மொத்த்ம 19 காலியிடங்கள் உள்ளன. சென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த ஆண்டுக்கான ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து நேரடியாக ஊழியராகலாம். இதற்கான அறிவிப்பு நவம்பர் 11-ஆம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் மொத்த்ம 19 காலியிடங்கள் உள்ளன. சென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு)…

Read More

சிறுதானியங்களில் தின்பண்டங்கள்: தொழில்முனைவோரான விவசாயி

விருதுநகர்: ஆரோக்கியம் மீதான கவனம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று, தொற்றா என இருவகை நோய்களாலும் நாம் அவதியை சந்திக்கிறோம். கொரோனாவுக்கு பின்பு தான் பல பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே போல சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு உணவு முறையில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. முன்பு ஏழை வீட்டு உணவாக இருந்த கேப்பை , கம்பு தற்போது பணக்காரர்களின் தட்டை அலங்கரிக்கிறது. நாம் உடலுழைப்பு இல்லாமலும் செரிமானத்திற்கு அதிக வேலை தரும் உணவுகளை உண்ண துவங்கியதும் தான் இன்றைய பெரும்பாலான நோய்களுக்கு காரணம். உடலை அறிந்து உண்ணும்படி நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் தான் பண்டிகை காலங்களுக்கு பின் விரத காலங்கள் துவங்கும். விரதங்களால் மட்டுமே உடலின் சமநிலையோடு வைத்திருக்க…

Read More

மகிழ்ச்சியில் ஆழ்த்திய பட்டாசு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

சிவகாசிதீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு. ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படுகிறது தீபாவளி. தீபாவளிக்கு புதிய ஆடை அணிகிறோமோ இல்லையோ பட்டாசு வெடித்து விடுவோம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் மகிழ்ச்சிக்குரிய பட்டாசினை குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தயாரிக்கிறார்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 95 சதவீதம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில்தான் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பட்டாசு விற்போர், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தீபாவளி நாளை எப்படி கொண்டாடினார்கள் என்பதை இதோ தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தனர்.

Read More

ஒரே நாளில் 17 பிரசவங்கள் சாதித்த சுகாதார நிலையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டானில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒரே நாளில் மட்டும் 17 பிரசவங்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. இக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களைதவிர நெல்லை மாவட்டம் பருவக்குடி, விஸ்வநாதப்பேரி, மாங்குடி,தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் கர்ப்பிணிகள் அதிகம் வருகின்றனர். இங்கு நவ.11ல் மட்டும் ஒரேநாளில் 17 பிரசவங்கள் நடந்துள்ளன.தலைமை மருத்துவர் கருணாகரப்பிரபு : 24 மணி நேரத்திற்குள் 17 பிரசவம் என்பது சிறிய அளவிலான இப்பகுதியில் சாதனைதான். இதில் 4 சுகப்பிரசவம், 13 அறுவை சிகிச்சை நடந்துதள்ளது. இதிலும் 9 பேர் 2 வது குழந்தை , 4 பேர் 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள். இச்சாதனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கடின உழைப்பு…

Read More

16 ஆயிரம்பேருக்கு தீபாவளி பரிசு: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கல்

சிவகாசி: மாவட்டத்தில்உள்ள அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீபாவளி பரிசு வழங்கினார்.விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் இல்லத்தில் நடந்தது. இதில் கிளை ஊராட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Read More

பனைஓலை பேக்கிங்கில் தின்பண்டங்கள்

காரியாபட்டி: இயற்கையானது மனிதனுக்கு அளித்துள்ள எத்தனையோ கொடைகளில் ஒன்று பனை மரம். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இது எண்ணற்ற பலன்களை தரக்கூடிய அற்புதமான மரம். தமிழர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வரும் பெருமைக்குரிய மரமும் கூட. முன்பு உணவு பொருட்களை பாதுகாக்க பனை ஓலையை பயன்படுத்தி உடலுக்கு எந்த கேடும் விளைவிக்காமல் பார்த்துக்கொண்டனர் நம் முன்னோர்கள். இயற்கை மாற்றத்தால் பனை மரங்கள் வளர்ப்பு குறைய வளர்ந்திருந்த எண்ணற்ற மரங்களும் தற்போது அழிகின்றன .இதன்காரணமாக இதன் மூலம் கிடைத்த எண்ணற்ற பலன்களும் தற்போது குறைந்து வருகிறது. வருங்கால சந்ததியினருக்கு பனை மரங்களின் பலன்கள் தெரியாமலே போய்விடுமோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் அனைத்து தேவைகளுக்கும் நெகிழிப் பொருட்களையே பயன்படுத்துகிறோம். இதனால் ஏற்படும் ஆபத்திலிருந்து விடுபட காரியாபட்டி இன்பம் பவுண்டேஷன் சார்பாக…

Read More