ஒரே நாளில் 17 பிரசவங்கள் சாதித்த சுகாதார நிலையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டானில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒரே நாளில் மட்டும் 17 பிரசவங்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது.

இக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களைதவிர நெல்லை மாவட்டம் பருவக்குடி, விஸ்வநாதப்பேரி, மாங்குடி,தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் கர்ப்பிணிகள் அதிகம் வருகின்றனர். இங்கு நவ.11ல் மட்டும் ஒரேநாளில் 17 பிரசவங்கள் நடந்துள்ளன.தலைமை மருத்துவர் கருணாகரப்பிரபு : 24 மணி நேரத்திற்குள் 17 பிரசவம் என்பது சிறிய அளவிலான இப்பகுதியில் சாதனைதான். இதில் 4 சுகப்பிரசவம், 13 அறுவை சிகிச்சை நடந்துதள்ளது. இதிலும் 9 பேர் 2 வது குழந்தை , 4 பேர் 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள். இச்சாதனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கடின உழைப்பு தான் காரணம், என்றார்

Related posts

Leave a Comment