சிறுதானியங்களில் தின்பண்டங்கள்: தொழில்முனைவோரான விவசாயி

விருதுநகர்: ஆரோக்கியம் மீதான கவனம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று, தொற்றா என இருவகை நோய்களாலும் நாம் அவதியை சந்திக்கிறோம். கொரோனாவுக்கு பின்பு தான் பல பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே போல சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு உணவு முறையில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. முன்பு ஏழை வீட்டு உணவாக இருந்த கேப்பை , கம்பு தற்போது பணக்காரர்களின் தட்டை அலங்கரிக்கிறது. நாம் உடலுழைப்பு இல்லாமலும் செரிமானத்திற்கு அதிக வேலை தரும் உணவுகளை உண்ண துவங்கியதும் தான் இன்றைய பெரும்பாலான நோய்களுக்கு காரணம். உடலை அறிந்து உண்ணும்படி நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் தான் பண்டிகை காலங்களுக்கு பின் விரத காலங்கள் துவங்கும். விரதங்களால் மட்டுமே உடலின் சமநிலையோடு வைத்திருக்க செய்ய முடியும். தற்போது துரித உணவுகள் பெருகிவிட்டது. இருப்பினும் சிறார்கள், இளைஞர்களை ஆரோக்கிய உணவுமுறைக்கு இழுக்க, ஈடுகொடுக்க சிறுதானிய தின்பண்டங்களே பெரிதும் உதவுகின்றன. இவ்வகை தின்பண்டங்களை விருதுநகர் தாதம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் செய்து வருகிறார். இவர் தொழில்முனைவோராக சிறுதானிய வகைகளில் பல்வேறு தின்பண்டங்களை செய்கிறார். அதன் மூலம் பலருக்கும் வேலை கொடுக்கிறார். இவரது தயாரிப்புகளில் கெட்டுப்போகாமல் இருக்க கூடிய ரசாயனங்கள், செயற்கை நிறமூட்டிகள் போன்ற வேதிபொருட்கள் எதுவும் இல்லை. 7 ஏக்கரில் சாகுபடி செய்யும் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி சிறுதானிய மிக்சர், கம்பு, சோள அவல், குதிரைவாலி முறுக்கு, சாமை ஒமப்பொடி, ராகி ஓமபொடி, மைதா சேர்க்காத கம்பு, திணை, ராகி பிஸ்கட்டுகளாக விற்கிறார். இவரது தயாரிப்புகளில் உள்ள க்யூ.ஆர்., கோடை பரிசோதிப்பதன் மூலம் உணவு பொருளின் பயன், செய்யும் முறை ஆகியவை காணொலியாக காண முடிகிறது.ஆற்றல் மிக்கதாக மாற்றும் இயந்திரங்களை மேம்படுத்தி உணவு பொருட்கள் செய்வதற்கு ஏற்றாற் போல் வடிவமைத்து கொள்கிறோம். எங்கள் தயாரிப்புகளில் செயற்கை இனிப்புகளை சேர்ப்பதில்லை. நாட்டு சர்க்கரையை தான் பயன்படுத்துகிறோம். ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் தான் மனித வளத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும். இவை தவிர சிறுதானிய சாத மிக்ஸ்களும் செய்கிறோம். எங்கள் நிறுவனம் தாதம்பட்டியில் மோத்தி புட்ஸ் எனும் பெயரில் இயங்கி வருகிறது. தொடர்புக்கு 98421 42049.சிவக்குமார், தொழில்முனைவோர், விருதுநகர்.

facebook sharing button
twitter sharing button

Related posts

Leave a Comment