பனைஓலை பேக்கிங்கில் தின்பண்டங்கள்

காரியாபட்டி: இயற்கையானது மனிதனுக்கு அளித்துள்ள எத்தனையோ கொடைகளில் ஒன்று பனை மரம். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இது எண்ணற்ற பலன்களை தரக்கூடிய அற்புதமான மரம். தமிழர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வரும் பெருமைக்குரிய மரமும் கூட. முன்பு உணவு பொருட்களை பாதுகாக்க பனை ஓலையை பயன்படுத்தி உடலுக்கு எந்த கேடும் விளைவிக்காமல் பார்த்துக்கொண்டனர் நம் முன்னோர்கள். இயற்கை மாற்றத்தால் பனை மரங்கள் வளர்ப்பு குறைய வளர்ந்திருந்த எண்ணற்ற மரங்களும் தற்போது அழிகின்றன .இதன்காரணமாக இதன் மூலம் கிடைத்த எண்ணற்ற பலன்களும் தற்போது குறைந்து வருகிறது. வருங்கால சந்ததியினருக்கு பனை மரங்களின் பலன்கள் தெரியாமலே போய்விடுமோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் அனைத்து தேவைகளுக்கும் நெகிழிப் பொருட்களையே பயன்படுத்துகிறோம். இதனால் ஏற்படும் ஆபத்திலிருந்து விடுபட காரியாபட்டி இன்பம் பவுண்டேஷன் சார்பாக கலாசார தீபாவளியாக கொண்டாட , பனை மரங்கள் மூலம் எண்ணற்ற பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன்பயனாக இப்பகுதியில் கிடைக்கும் தரமான தின்பண்டங்களை வாங்கி கலிபோர்னியாவில் வசிக்கும் உறவுகளுக்கு பனை ஓலை பேக்கிங்கில் பார்சல்கள் அனுப்பி வருகின்றனர்.

Related posts

Leave a Comment