மகிழ்ச்சியில் ஆழ்த்திய பட்டாசு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

சிவகாசிதீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு. ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படுகிறது தீபாவளி. தீபாவளிக்கு புதிய ஆடை அணிகிறோமோ இல்லையோ பட்டாசு வெடித்து விடுவோம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் மகிழ்ச்சிக்குரிய பட்டாசினை குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தயாரிக்கிறார்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 95 சதவீதம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில்தான் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பட்டாசு விற்போர், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தீபாவளி நாளை எப்படி கொண்டாடினார்கள் என்பதை இதோ தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தனர்.

Related posts

Leave a Comment