அம்மா விபத்து காப்பீடு திட்டம்; முறையான தகவலின்றி தவிப்பு

விருதுநகர் : மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் குறித்து வாழ்வாதார இயக்க அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காததால் மக்கள் தவிக்கும் நிலை தொடர்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அம்மா விபத்து காப்பீட்டு திட்டம் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அரசுக்கு பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் அலுவலகம் சென்றால் விபத்து காப்பீடா, ஆயுள் காப்பீடா, எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்படுகிறது போன்ற விவரங்களை வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட பா.ஜ., விவசாய அணி தலைவர் ரெங்கராஜா: அரசின் திட்டம் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. வி.ஏ.ஓ.,க்கள், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் தகுதியான விண்ணப்பதாரருக்கு விவரங்களை…

Read More

விருதுநகரில் 16,27,128 வாக்காளர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 7 ,93, 864 பெண், 8,33,81 ஆண், 183 இதரர் என 16,27 ,128 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட அவர் கூறியதாவது: 2021 ஜன., 1 ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் இன்று (நேற்று) துவங்கி டிச.,15ல் நிறைவடைகிறது. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் ,திருத்தங்கள் செய்வோர் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், வட்ட, கோட்ட மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜன.,20 ல் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நவ.,21, 22, டிச.,12, 13 ல் நடக்கிறது. 2021 ஜன.,1 அன்று 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள்…

Read More