அம்மா விபத்து காப்பீடு திட்டம்; முறையான தகவலின்றி தவிப்பு

விருதுநகர் : மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் குறித்து வாழ்வாதார இயக்க அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காததால் மக்கள் தவிக்கும் நிலை தொடர்கிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அம்மா விபத்து காப்பீட்டு திட்டம் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அரசுக்கு பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் அலுவலகம் சென்றால் விபத்து காப்பீடா, ஆயுள் காப்பீடா, எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்படுகிறது போன்ற விவரங்களை வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்ட பா.ஜ., விவசாய அணி தலைவர் ரெங்கராஜா: அரசின் திட்டம் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. வி.ஏ.ஓ.,க்கள், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் தகுதியான விண்ணப்பதாரருக்கு விவரங்களை தெரிவித்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment