நிறைந்தது விருதுநகர் தெப்பம்

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தெப்பம் நிறைந்து மறுகால் பாய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் நகராட்சிக்கு உட்பட்ட 16 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பழமையான, புராதான சிறப்பு மிக்க இத்தெப்பத்தின் மையத்தில் மண்டபம் உள்ளது. 22 அடி நீர் மட்டம் கொண்ட இதை பலசரக்கு மகமை முறைகாரர்கள் நிர்வகிக்கின்றனர்.முன்பு மழைக் காலங்களில் இறைப்ப நாயக்கர் ஊரணி, பேராலி, சின்ன பேராலி உள்ளிட்ட பகுதிகளில் 3500 ஏக்கர் தரிசு நிலத்தில் பெய்த மழை நீர் தெப்பத்தை நிறைத்தது. நீர் நிலைகளை பராமரிக்க தவறியதால் வரத்து கால்வாய்கள் துார்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வீணாகியது.பலசரக்கு மகமை முறைகாரர்கள் சார்பில் விராலிமலை – சின்னமூப்பன்பட்டி சந்திப்பில் கவுசிகா நதி கரையில் 11 ஏக்கரில் குளம் வெட்டி அதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்படுகிறது. தற்போது பெய்யும் வடகிழக்கு பருவமழையால் தெப்பக்குளம் நிறைந்து மறுகால் பாய்கிறது.

Related posts

Leave a Comment