பொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் மெகா பிரசாரம் இன்று முதல் 75 நாட்களுக்கு நடைபெறுகிறது. மொத்தம் 1,500 பொதுக்கூட்டங்களில் 15 திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பிரசாரம் செய்கின்றனர். ஸ்டாலின் பிரசாரம் எப்போது? இந்த நிலையில் மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கோவிட் 144 தடை இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, இப்போது கோவிட் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இப்போது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மக்களை தொடர்பு கொண்டுதான் இருக்கிறார். அவர் மாவட்டந்தோறும் நேரடியாக சென்றால்…

Read More

சூறாவளி சுற்றுப்பயணம்

மறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த ஊரான திருக்குவளையில் 20.11.2020 நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் துவங்க இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகன், கழக இளைஞரணி செயலாளர், இளைய சூரியன், திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்💐💐💐 இவண்: திரு. S.V.சீனிவாசன் அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்றக் கழகம்..

Read More