#டிசம்பர் 12, *#விருதுநகர்* *#மாவட்டம்* *தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 13.12.2020* அன்று *விருதுநகர்* மாவட்டத்தில் 1. தேவாங்கர் கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை. 2. KVS. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். 3. KVS. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். 4. விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விருதுநகர். 5. ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி, ஆமத்தூர், விருதுநகர். 6. VSVN. பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகர். 7. சௌடாம்பிகை கல்லூரி, பந்தல்குடி 8. சேது பொறியியல் கல்லூரி, காரியாபட்டி. 9. SRNM. கல்லூரி, சாத்தூர். 10. S.F.R. மகளிர் கல்லூரி, சிவகாசி. 11. ANJAC. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி. 12. PSR. பொறியியல் கல்லூரி,…
Read MoreDay: December 14, 2020
#TNUSRB #PCExam #TNPolice …
தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக13-12-2020 ம் தேதியன்று, தேர்வு எழுதும் தேர்வாளர்கள் அனைவருக்கும் virudhunagar.info சார்பாக வாழ்த்துக்கள் #TNUSRB #PCExam #TNPolice …
Read Moreசிவகாசி மாணவி நாகமுத்துமாரி வாழ்த்துக்கள்!
தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சிவகாசி மாணவி நாகமுத்துமாரி வாழ்த்துக்கள்!
Read More2வது ஆண்டில் sivakasi.info உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி…
2வது ஆண்டில் sivakasi.info உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி…
Read Moreகுண்டும் குழியுமான மேம்பாலம்; வாகன ஓட்டிகள் ‘திக்திக்’
விருதுநகர் : விருதுநகர் – அருப்புக்கோட்டை மேம்பாலம் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் ‘திக்திக்’ பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் லெவல் கிராசிங்கை எளிதில் கடந்து செல்ல, போக்குவரத்து நெரிசலை குறைக்க, அருப்புக்கோட்டை ரோட்டில் மேம்பாலம் 2003ல் அமைக்கப்பட்டது. இப்பாலம் செயல்பாட்டுக்கு வந்த பின் ஒரே ஒரு முறை மட்டுமே ரோடு அமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க தவறி வருவதால் குண்டும், குழியுமாக பழுதாகி விட்டது. மேம்பாலத்தில் செல்லும் டூவீலர் ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். வெள்ளை கோடுகள், இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் என எதுவும் இல்லை. பாலத்தின் இருபுறமும் மண்மேவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி சறுக்கி விழுகின்றனர். மழை பெய்து காய்ந்தால் துாசு அதிகளவில் கிளம்பி மாசு ஏற்படுகிறது. பாலம் அகலம் குறைவாக உள்ளதால் டூவீலர்…
Read Moreஐயப்ப சுவாமி திரு வீதி உலா
ராஜபாளையம் : ராஜபாளையம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் 35 ம் ஆண்டு திரு வீதி உலா நடந்தது. மூன்று நாள் நடைபெறும் விழாவில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை, மறுநாள் அஷ்டாபிேஷகம், நாம சங்கீர்த்தனம், சித்தி விநாயகர் கோயில் உற்ஸவர் கும்பாபிேஷகம், கன்னி பூஜை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை 10:00 மணிக்கு மேல் காவல் கருப்பசாமி தேர் முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா முடங்கியாறு ரோட்டில் துவங்கியது.மாடசாமி கோயில் தெரு, பழைய பஸ் ஸ்டாண்டு, ஆண்டத்தம்மன் கோயில் தெரு வழியே அன்னதான பந்தலுக்கு வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருநாதர் முத்துராமலிங்கம் தலைமையில் சேவா சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Read Moreகொரோனா, தொடர் மழைகாலண்டர் விலை உயர்வு
சிவகாசி : கொரோனா தொற்றால் 30 சதவீதம் உற்பத்தி பாதிப்பால் காலண்டர் விலை 20 சதவீதம் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உற்பத்தியாளர்கள் சங்கம் செயலாளர் ஜெயசங்கர் கூறியதாவது: கொரோனா தொற்றால் 60 நாட்கள் காலண்டர் உற்பத்தி பணிகள் நடக்காமல் 30 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையாலும் காலண்டர் உற்பத்திக்கு தேவையான பாலிபோர்ட், மில்போர்ட் தட்டுப்பாடு, டியூப்லக்ஸ் போர்ட் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வு, போதுமான இறக்குமதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் இந்தாண்டு காலண்டர் 20 சதவீதம் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
Read Moreபுனரமைக்காமல் துார்ந்த கிணறுகள் கேள்வி குறியாகும் நீர் மேலாண்மை
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள துார்ந்த கிணறுகளை மாவட்ட நிர்வாகம் புனரமைக்காததால் நீர் மேலாண்மை கேள்விக்குறியாகி வருகிறது. கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் காமராஜர் சிலைக்கு பின்புறம், பொதுப்பணித் துறையின் விருந்தினர் மாளிகை பின்புறம், கருவூல அலுவலகம் பின்புறம், எஸ்.பி., அலுவலகம் பின்புறம் என ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் கிணறுகள் உள்ளன. கலெக்டர் அலுவலகம் நுழைவு பகுதியில் உள்ள கிணறு மட்டுமே பாதுகாக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது. மற்ற கிணறுகள் துார்ந்து போயும், குப்பைகள் தேங்கியும், புதர்மண்டியும் காணப்படுகிறது. தேவையான மழை பெய்தும் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. கலெக்டர் அலுவலகம் கூரைக்கூண்டு ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. எனினும் குடிநீர், பிற தேவைகளை நகராட்சி நிர்வாகம் உதவி வருகிறது. அலுவலர்கள், ஊழியர்கள் குடிப்பதற்கு மினரல் குடிநீர் கேன்களும் அதிகளவில் வாங்குவதால் வருவாய்…
Read Moreசிட்டிபேனர்
நரிக்குடி : மாவட்டத்தில் ஒன்றிய அலுவலங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்வது கிடையாது. இதனால் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்து வருகிறது. மாவட்டத்தில் ஐந்தாயிரம் ஓட்டுகள் கொண்ட பகுதியில் இருந்து ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒன்றிய தலைவர், துணை தலைவர்களை தேர்வு செய்கின்றனர். ஒன்றிய அலுவலகங்களில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடக்கும் ஒன்றிய கூட்டங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், 28 துறை அதிகாரிகள், ஒன்றிய தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இதில் ஊரகள வளர்ச்சி மேம்பாட்டு பணிக்கு தேவையான நிதி, ஏற்கனவே செலவிடப்பட்ட நிதி, குடிநீர் பற்றாக்குறை, தீர்வுகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகளுடன், கவுன்சிலர்கள் பேசி விவாதித்து நல்ல முடிவுகளை எடுப்பர். இதன் மூலம் ஊரக பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இக்கூட்டங்களில் பெரும்பாலான அதிகாரிகள்…
Read Moreதேசிய மக்கள் நீதிமன்றம் 2431 வழக்குகளுக்கு தீர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அந்தந்த நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தலைமையில் நடந்தது. இதில் 3 ஆயிரத்து 470 பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 2431 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ. 5 கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்து 775 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.விபத்து வழக்கில் ராஜபாளையம் வேட்டை பெருமாள் நகரை சேர்ந்த மாயகிருஷ்ணனுக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்கிய ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்தை நீதிபதி முத்து சாரதா நேரில் வழங்கினார். நீதிபதிகள் சுமதி சாய்பிரியா, நீதிபதி பரிமளா, காஞ்சனா, சந்திரகாசபூபதி, சிவராஜேஷ், மக்கள் நீதி மன்ற தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் மாரியப்பன், சார்பு நீதிபதிகள் கதிரவன், சுந்தரி, ஆனந்தி, நீதித்துறை நடுவர் பரம்வீர், அரசு டாக்டர் சுரேஷ்…
Read More