நரிக்குடி : மாவட்டத்தில் ஒன்றிய அலுவலங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்வது கிடையாது. இதனால் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்து வருகிறது.
மாவட்டத்தில் ஐந்தாயிரம் ஓட்டுகள் கொண்ட பகுதியில் இருந்து ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒன்றிய தலைவர், துணை தலைவர்களை தேர்வு செய்கின்றனர். ஒன்றிய அலுவலகங்களில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடக்கும் ஒன்றிய கூட்டங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், 28 துறை அதிகாரிகள், ஒன்றிய தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இதில் ஊரகள வளர்ச்சி மேம்பாட்டு பணிக்கு தேவையான நிதி, ஏற்கனவே செலவிடப்பட்ட நிதி, குடிநீர் பற்றாக்குறை, தீர்வுகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகளுடன், கவுன்சிலர்கள் பேசி விவாதித்து நல்ல முடிவுகளை எடுப்பர்.
இதன் மூலம் ஊரக பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இக்கூட்டங்களில் பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…… பாக்ஸ் ……பிரச்சனை தீர வழிஒன்றிய கூட்டங்களை 60 நாட்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்பது விதி. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இருந்தால் பிரச்சினைகளை எடுத்துக் கூற ஏதுவாக இருக்கும். இக்கூட்டங்கள் கடமைக்காக நடத்தப்படுகிறது. இதனால் பிரச்சினைகள் தீர வழியின்றி போகிறது. இனியாவது ஒன்றிய கூட்டங்களை முறையாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமச்சந்திரன், சமூக ஆர்வலர், உலக்குடி