தேசிய மக்கள் நீதிமன்றம் 2431 வழக்குகளுக்கு தீர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அந்தந்த நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தலைமையில் நடந்தது.

இதில் 3 ஆயிரத்து 470 பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 2431 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ. 5 கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்து 775 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.விபத்து வழக்கில் ராஜபாளையம் வேட்டை பெருமாள் நகரை சேர்ந்த மாயகிருஷ்ணனுக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்கிய ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்தை நீதிபதி முத்து சாரதா நேரில் வழங்கினார். நீதிபதிகள் சுமதி சாய்பிரியா, நீதிபதி பரிமளா, காஞ்சனா, சந்திரகாசபூபதி, சிவராஜேஷ், மக்கள் நீதி மன்ற தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் மாரியப்பன், சார்பு நீதிபதிகள் கதிரவன், சுந்தரி, ஆனந்தி, நீதித்துறை நடுவர் பரம்வீர், அரசு டாக்டர் சுரேஷ் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment