அதிகாரியின் ஸ்ரீவி., தோட்டத்தில் பதுக்கிய சந்தன மரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்:கோவை வன அதிகாரி ஆரோக்கியசாமி மனைவி கலைவாணியின் ஸ்ரீவில்லிபுத்துார் தோட்டத்தில், பதுக்கி வைக்கபட்டிருந்த சந்தன கட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். ஆரோக்கியசாமி, கலைவாணியிடம் விசாரணை நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. கோவை போளுவாம்பட்டியில் வன அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே திருவண்ணாமலை பந்தப்பாறையில் தோட்டம் உள்ளது. இங்கு சந்தனமரங்கள் வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஸ்ரீவில்லிபுத்துார் உதவி வனப்பாதுகாவலர் அல்லிராஜ் தலைமையில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அறையில் இருந்த ஏராளமான சந்தன கட்டடைகளை கைப்பற்றி ஸ்ரீவி.,வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஆரோக்கியசாமி, கலைவாணியிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment