பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவது தவறல்ல – குஷ்பு, பாஜக #Khushbu | #BJP | #EdappadiPalaniswami | #KamalHaasan | #TNElections2021
Read MoreDay: December 21, 2020
இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்
இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்
Read Moreசமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விருதுநகர் தெற்கு/வடக்கு மாவட்ட செயலாளர்கள் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA, திரு.தங்கம்தென்னரசு MLA அவர்களின் அறிவிப்பு!விருதுநகர் தெற்கு/வடக்கு மாவட்ட கழக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Read Moreநோயால் பலியாகும் ஆடுகள்
காரியாபட்டி : காரியாபட்டி புல்லுார் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பருவ மழையால் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் புல்லுாரில் மர்ம நோய் தாக்கி ஆடுகள் பலியாகி வருகின்றன.அதே பகுதி ஆறுமுகம் பேச்சியம்மாள் தம்பதியினர் வளர்த்து வந்த 50க்கு மேற்பட்ட ஆடுகள் பலியாகின. திடீரென மயங்கி விழுந்து ஆடுகள் பலியானதால் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.ஆறுமுகம் கூறியதாவது: மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகள் மயங்கி விழுகின்றன. வாயில் வானீர் வடித்து ஒவ்வொரு ஆடாக பலியாகின்றன. இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட ஆடுகள் பலியாகி விட்டன. கால்நடை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் பல ஆடுகள் பலியாகும் முன் கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.
Read Moreபிளவக்கல் அணையில் கரடி : பார்வையாளர்கள் அனுமதியில் தாமதம்
வத்திராயிருப்பு : பிளவக்கல் பெரியாறு அணைப்பகுதியில் கரடி ஒன்று குட்டியுடன் சுற்றி திரிவதால் இங்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. நவம்பரில் அணைப்பகுதியில் விவசாய பணிக்கு சென்று திரும்பிய இருவரை கரடி தாக்கி காயப்படுத்தியதால் தளர்வுகளுக்கு பின்பும் அனுமதிக்கவில்லை. இதனிடையே தற்போது கரடி ஒன்று குட்டியுடன் சுற்றிதிரிகிறது. இதை வனத்திற்குள் விரட்டி விட பொதுப்பணித்துறை சார்பில் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் நடமாட்டம் கட்டுபடுத்தபட்ட பின்பு பார்வையாளர்கள் அனுமதிக்கபட உள்ளனர்.
Read Moreதனியாரிடம் துாய்மை பணியாளர்கள்
விருதுநகர் : விருதுநகர் நகராட்சி துாய்மை பணியாளர்களை தனியாருக்கு தாரை வார்த்த நகராட்சி நிவாகத்தால் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து சுகாதார பிரிவில் பணியாற்றும் 80 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 100 ஒப்பந்த துாய்மை பணியாளர்களும் இனி தனியாருக்கு கீழ் பணிபுரிய உள்ளனர். இதற்கு முன்பும் ஒருமுறை தனியாரிடம் சுகாதார பணிகள் விடப்பட்ட போது பல்வேறு முறைகேடுகள் நடந்தன. பணிகளும் முறையாக நடக்கவில்லை. தற்போது மீண்டும் தனியாரிடம் பணிகளை ஒப்படைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நிதி நெருக்கடியில் தவிக்கும் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தது கூடுதல் சுமை தான். துாய்மை பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை பணயம் வைத்து தான் குப்பை அள்ளுகின்றனர். தொடர்ந்து…
Read Moreநாளை (டிச.21) மின்தடை
ராஜபாளையம் அய்யனார் கோயில் பகுதிகள், ராஜூக்கள் கல்லுாரி பகுதிகள், மாலையாபுரம் தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல்நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்னசுரைக்காய்பட்டி, பெரிய சுரைக்காய்பட்டி, பழையபாளையம், மாடசாமிகோவில் தெரு, ஆவரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, மதுரை ரோடு, பெரியகடை பஜார்.* சேத்துார், தேவதானம், கோவிலுார், சொக்கனாதன்புத்துார், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்துார், புனல்வேலி, மீனாட்சியாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம்.
Read Moreமக்களுக்கு உதவும் சட்ட உரிமை சங்கம்
சிவகாசிஇயந்திரமயமான இன்றைய நவீன யுகத்திலும் ஈர மனதுடன் பலர் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சரியான நபருக்கு சரியான உதவியை வழங்க முடியும். சமூகப் பணி என்பது தனி நபராலோ ,ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ, சமூக நலன் கருதி செய்யப்படும் சேவை. அந்த வகையில் 2019 ல் தமிழன் ஜெகன் என்பவர் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், பாமர மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்டு தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் கொரோனா தொற்று காலத்தில் சிவகாசி பகுதியில் இல்லாதவர் களுக்கு அரிசி ,காய்கறிகள், புடவைகள் என உதவிகள் வழங்கினர். கொரோனா காலத்தில் உழைத்த போலீசார், துாய்மைப்…
Read Moreசுய சார்பு, உழைப்பு… முன் மாதிரியாக ஜோகில்பட்டி
விருதுநகர்விருதுநகர் அருகே ஜோகில்பட்டி கிராம மக்களின் சுய சார்பு சிந்தனை, உழைப்பே மூலதனம், தன்னம்பிக்கை, ஒற்றுமை என சொந்த முயற்சியால் அமைக்கப்பட்ட தெப்பக்குளம் மழையால் நிரம்பி மிடுக்காக காட்சியளிக்கிறது.தொன்மையான சிற்பக்கலை, கட்டடக்கலை, கல்வெட்டுக்களை தத்ரூபமாக, உயிரோட்டமாக உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.இந்த வரிசையில் விருதுநகர் – காரியாபட்டி ரோட்டில் உள்ள ஜோகில்பட்டி மையத்தில் உழைப்பை மூலதனமாக கொண்டு இங்குள்ள தெப்பக்குளம் அமைத்துள்ளனர். வறண்ட பூமியை வளமாக்கும் பொருட்டு மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வயல்களில் பாய்ந்து வீணாவதை தடுப்பதற்காக வரத்து கால்வாய்களை அமைத்து சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுத்து தெப்பக்குளத்திற்குள் திருப்பி விட்டனர்.இதன் விளைவு ஆண்டு முழுவதும் தெப்பக்குளம் நிரம்பி மிடுக்காக காட்சியளித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வீடுகள் தோறும் போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கிறது. கோடை…
Read Moreசாலையோர செடிகள், புதர்கள் அகற்றம்
விருதுநகர் : மாவட்டத்தில் பெய்யும் மழையால் மாநில நெடுஞ்சாலையோரங்களில் செடிகள், புதர்கள் மண்டி வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு புதர்களை அகற்றும் பணியில் மாவட்டத்தில் சாலை பணியாளர்கள் 326 பேர் குழுவாக பிரிந்து ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பெய்யும் மழையால் சாலையோரங்களில் கருவேல முள் செடிகள், புற்கள், புதர்கள் முளைத்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. அடர்ந்து வளர்ந்த கருவேல முள் செடிகள் ரோட்டில் நீட்டி கொண்டுள்ளது. வளைவுகளில் திரும்பும்போது முள் செடிகளில் சிக்கி வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். இரவில் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது.இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மேற்பார்வையில் புதர்களை அகற்றி போக்குவரத்து சீரமைப்பு பணியில் சாலை பணியாளர்கள் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து தவிர்ப்புசெல்வராஜ், சாலை பணியாளர்: அருப்புக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட மாந்தோப்பு முதல்…
Read More