நோயால் பலியாகும் ஆடுகள்

காரியாபட்டி : காரியாபட்டி புல்லுார் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பருவ மழையால் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் புல்லுாரில் மர்ம நோய் தாக்கி ஆடுகள் பலியாகி வருகின்றன.அதே பகுதி ஆறுமுகம் பேச்சியம்மாள் தம்பதியினர் வளர்த்து வந்த 50க்கு மேற்பட்ட ஆடுகள் பலியாகின. திடீரென மயங்கி விழுந்து ஆடுகள் பலியானதால் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.ஆறுமுகம் கூறியதாவது: மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகள் மயங்கி விழுகின்றன. வாயில் வானீர் வடித்து ஒவ்வொரு ஆடாக பலியாகின்றன.

இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட ஆடுகள் பலியாகி விட்டன. கால்நடை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் பல ஆடுகள் பலியாகும் முன் கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Related posts

Leave a Comment