பிளவக்கல் அணையில் கரடி : பார்வையாளர்கள் அனுமதியில் தாமதம்

வத்திராயிருப்பு : பிளவக்கல் பெரியாறு அணைப்பகுதியில் கரடி ஒன்று குட்டியுடன் சுற்றி திரிவதால் இங்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. நவம்பரில் அணைப்பகுதியில் விவசாய பணிக்கு சென்று திரும்பிய இருவரை கரடி தாக்கி காயப்படுத்தியதால் தளர்வுகளுக்கு பின்பும் அனுமதிக்கவில்லை. இதனிடையே தற்போது கரடி ஒன்று குட்டியுடன் சுற்றிதிரிகிறது. இதை வனத்திற்குள் விரட்டி விட பொதுப்பணித்துறை சார்பில் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் நடமாட்டம் கட்டுபடுத்தபட்ட பின்பு பார்வையாளர்கள் அனுமதிக்கபட உள்ளனர்.

Related posts

Leave a Comment