சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மார்கழி பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.காலை 7:00 மணி முதல் அறநிலைய துறை மற்றும் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு தாணிப்பாறையிலிருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அபிேஷகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.மலை செல்லும் பாதை ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது.

Related posts

Leave a Comment