தமிழக பள்ளி பொதுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளி பொதுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்!

Read More

கைகொடுக்காத மக்காச்சோளம், பருத்தி; கொத்துமல்லி சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்

விருதுநகர் : மாவட்டத்தில் காலம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று யோசனையாக கொத்துமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி சாகுபடியை நம்பியே விவசாயிகள் உள்ளனர். இந்தாண்டு 60 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரிட்டனர்.காலம் தவறிய மழையால் விளைச்சல் கைகொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் கவனம் திரும்பி உள்ளது. அருப்புக்கோட்டை, பாலவநத்தம், திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரயாக கொத்துமல்லி சாகுபடி செய்து வருகின்றனர்.பாலவநத்தம் விவசாயி அழகம்மாள்: ஐப்பசி 15 ல் கொத்துமல்லி விதைப்பது வழக்கம். காலம் தவறி மழை பெய்ததால் கார்த்திகை 1ல் விதைத்தோம். 45 நாள் கழித்து தை யில் அறுவடை செய்வோம். இதில் குறைவான…

Read More

அரசியலில் மாற்றம் வேண்டும் : ம. நீ.ம.,தலைவர் கமல் பேச்சு

அருப்புக்கோட்டை : ”தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும்,”என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார். அருப்புக்கோட்டையில் நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கும் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது : தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும். தற்போதைய நிலைமை பார்த்து படித்தவர்கள் உட்பட பலரும் கொதித்து போய் உள்ளனர். ஓட்டு போடுவது உங்கள் கடமை.அதை யாருக்கு போடுவது என்பது உங்கள் உரிமை. நல்ல நேர்மையாளர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் , என்றார்.மாநில பொது செயலாளர் உமாதேவி, சந்தோஷ் பாபு, முருகானந்தம், கிழக்கு மாவட்ட செயலர் பாஸ்கரன், மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் , பொருளாளர் மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.

Read More

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார் : பிராமணர் சங்கத்தின் சார்பில் திருப்பாவை ஒப்புவித்தல் மற்றும் கோலப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சடகோபராமானுஜ ஜீயர், பரிசுகளை வழங்கி ஆசீர்வதித்தார்.ஏற்பாடுகளை ஸ்ரீவாரி முத்துபட்டர், சேஷாத்ரி,மலைஸ்ரீனிவாசன் செய்திருந்தனர்.

Read More

அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி குடிநீர்; சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டைக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க 230 கோடி ரூபாய் மதிப்பில் தாமிரபரணி புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான முதற் கட்ட பணிகள் மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் நடந்தது. இதை சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: கடந்த தேர்தல் அறிக்கையில் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்தை அருப்புக்கோட்டைக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்து இருந்தேன். அதன்படி புதிய குடிநீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் பணி முடிந்து விடும். திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது நகரில் தினமும் குடிநீர் விநியோகம் நடைபெறும்,என்றார்.நகராட்சி கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் சாகுல்அமீது, முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், முன்னாள் ஒன்றிய தலைவர்…

Read More