அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி குடிநீர்; சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டைக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க 230 கோடி ரூபாய் மதிப்பில் தாமிரபரணி புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான முதற் கட்ட பணிகள் மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் நடந்தது. இதை சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

அவர் கூறியதாவது: கடந்த தேர்தல் அறிக்கையில் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்தை அருப்புக்கோட்டைக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்து இருந்தேன். அதன்படி புதிய குடிநீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் பணி முடிந்து விடும். திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது நகரில் தினமும் குடிநீர் விநியோகம் நடைபெறும்,என்றார்.நகராட்சி கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் சாகுல்அமீது, முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், தி.மு.க., நகர செயலர் மணி கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment