கைகொடுக்காத மக்காச்சோளம், பருத்தி; கொத்துமல்லி சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்

விருதுநகர் : மாவட்டத்தில் காலம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று யோசனையாக கொத்துமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி சாகுபடியை நம்பியே விவசாயிகள் உள்ளனர். இந்தாண்டு 60 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரிட்டனர்.காலம் தவறிய மழையால் விளைச்சல் கைகொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் கவனம் திரும்பி உள்ளது.

அருப்புக்கோட்டை, பாலவநத்தம், திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரயாக கொத்துமல்லி சாகுபடி செய்து வருகின்றனர்.பாலவநத்தம் விவசாயி அழகம்மாள்: ஐப்பசி 15 ல் கொத்துமல்லி விதைப்பது வழக்கம். காலம் தவறி மழை பெய்ததால் கார்த்திகை 1ல் விதைத்தோம். 45 நாள் கழித்து தை யில் அறுவடை செய்வோம். இதில் குறைவான லாபம் என்றாலும் விதைகளை உற்பத்தி செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். இயற்கை அடி உரம் இடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கும், என்றார்.

Related posts

Leave a Comment