குரூப் 1 தேர்வு 3959 பேர் ஆப்சென்ட்

விருதுநகர் : மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு 8,067 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று 28 மையங்களில் நடந்த தேர்வில் 4,108 பேர் பங்கேற்றனர். 3,959 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். இப்பணியில் 5 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், துணை கலெக்டர் நிலையில் 4 பறக்கும் படையினர் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களை கலெக்டர் கண்ணன் பார்வையிட்டார். சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் முத்துலெட்சுமி உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment