மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவமுகாம்

இந்திய இயற்கை மருத்துவ சங்கம் மற்றும் சிவகாசி இன்னா்வீல் சங்கம் இணைந்து சிவகாசியில் திங்கள்கிழமை காதுகேளாதோா் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவமுகாம்னை நடத்தினா்.

முகாமினை இன்னா்வீல் சங்கத்தலைவா் பிரபாவதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் 98 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவா் தமயந்தி, அபிநயா, அனந்ததேவி உள்ளிட்டோா் பரிசோதனை செய்தனா். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு, இ.சி.ஜி.உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, இலவச மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

முன்னதாக இன்னா் வீல் சங்க செயலாளா் அஞ்சாதேவி வரவேற்றாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி நன்றி கூறினாா்.

Related posts

Leave a Comment