2ம்ஆண்டு அடியெடுத்து வைப்பதற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்… 

மக்கள் குறை தீர்க்கும் மன்னனாக திகழும். #லயன்_வீ_கருப்பு ( எ ) #V_லட்சுமிநாராயணன் அவர்கள். #ஆனையூர்_ஊராட்சி_மன்ற_தலைவராக 2ம்ஆண்டு அடியெடுத்து வைப்பதற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

Read More

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 541 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 105 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 16,065 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,705 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2, 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையில் உள்ளது. மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,508 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. பரிசோதனை முடிவுகள் தாமதப்படுத்தபடுவதால் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போதிய அக்கறை காட்டாத நிலையில்…

Read More

விதிகளை மீறி குவாரிக்கு அனுமதி … பாதையை மறித்து விவசாயிகள் எதிர்ப்பு

விருதுநகர் : விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் கல் குவாரி அமைக்கும்முயற்சியை முறியடிக்கும் வகையில் பாதையை மறித்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கல் குவாரி அமைக்க வருவாய் துறை, கனிம வளத்துறை பரிந்துரைப்படி கலெக்டரிடம்அனுமதி பெற வேண்டும். விவசாயம், நீரோடை, நீர் வழித்தடம், நிலத்தடி நீர் மட்டம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாதது என வருவாய் துறையினர் கனிம வளத்துறையிடம் பரிந்துரைக்க வேண்டும்.அதன்படி குவாரி அமைக்கும் போது குவாரியை சுற்றிய கிராமங்களில் கிராம சபை மூலம் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்ற பின் தான் குவாரி அமைக்க வேண்டும் என்பது விதி.ஆனால் மாவட்டத்தில் இது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது ஏட்டளவிலே உள்ளது. வருவாய் துறை,கனிம வளத்துறைகள ஆய்வு செய்யாமலே அனுமதி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது போன்றுதான் விவசாயம் நிறைந்த எரிச்சநத்தம் பகுதி…

Read More

அதிகாரிகளை கண்டித்து மறியல்; போலீசார் தடியடி

நரிக்குடி:உபரி நீரை திறந்து விடுவதாக கூறி சென்று காலதாமதப்படுத்தும் கலெக்டர், தாசில்தாரை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நரிக்குடி கீழ் இடையன்குளம் கண்மாயில் இருந்து வெளியேறும் உபரிநீர் நீண்டகாலமாக மைலி கண்மாய்க்கு சென்றது. இதை சில ஆண்டுகளாக கீழ் இடையான்குளம் கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். மைலி கண்மாய் நிரம்பாமல் விவசாயம் பாதிக்கப்பட்டதையடுத்து உபரி நீரை திறந்து விட அதிகாரிகளிடம் கோரினர். பல்வேறு போராட்டங்களை நடத்திய மைலி கிராமத்தினர் ஆத்திரமடைந்து சில மாதங்களுக்கு முன் தாசில்தாரிடம் ரேஷன் கார்டை ஒப்படைத்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சில தினங்களில் உபரி நீரை திறந்து விடுவதாக கூறினர். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்நிலையில் கால தாமதப்படுத்தி வரும் கலெக்டர், தாசில்தாரை கண்டித்து திருச்சுழி–ராமேஸ்வரம் சாலையில் 4 மணி நேரம்…

Read More

சிதையும் சன்ஷேடுகள் பெயரும் நடைபாதை கற்கள் ; அவலத்தின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்

ஸ்ரீவில்லிபுத்துார் : சிறுமழை பெய்தாலே மழைநீர் தேங்கும் அவலம், சுகாதாரக்கேட்டில் கழிப்பறை, கொசுத்தொல்லை, சிதையும் சன்ஷேடுகள்,பெயரும் நடைபாதை கற்கள், இடநெருக்கடி என பல்வேறு அவலங்களின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் இருப்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் அதிகளவு நகர மக்களும், பல்வேறு கிராம மக்களும் வந்து செல்கின்றனர். இதோடு 200க்கு மேற்பட்ட அரசு ,தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. இது போன்று அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், காலை மற்றும் மாலையில் பீக்ஹவர்சில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பஸ் ஸ்டாண்டின் உட்புறம், சுற்றுப்பகுதியிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இடம் இன்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர். வெளி பகுதி ரோடு உயர்ந்துவிட்டதால் பஸ் ஸ்டாண்ட் தாழ்வாகி சிறுமழைக்கே குளம்போல்…

Read More

200 எக்டேரில் ராமர் கரும்பு: அறுவடைக்கு ரெடி

விருதுநகர் : மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, எரிச்சநத்தம் பகுதியில் 200 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள ராமர் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சொல் வழக்கில் ராமர் கரும்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இனிப்புச்சுவை துாக்கலாக இருக்கும் இக்கரும்பை எட்டு மாதங்களுக்கு பின் அறுவடை செய்யலாம். கடித்து சுவைக்க எளிதாக இருப்பதால் இக்கரும்பு பண்டிகை காலங்களில் பிரதான இடம் வகிக்கிறது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, எரிச்சநத்தம், நடையனேரி உள்ளிட்ட பகுதிகளில் 200 எக்டேரில் ராமர் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் முழு கரும்பு தருவதற்காக புரோக்கர்களை தவிர்த்து விவசாயிகளிடம் அரசு சார்பில் கரும்பு ஒன்று ரூ.10க்கு நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையில் நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார்: இது போல் தைப்பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை பகுதி யிலிருந்து…

Read More

சுத்திகரிப்பு குடிநீர் தரத்தை கண்டறிய எளிய வழி

உணவு பாதுகாப்புத்துறையின் பணி நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 2011ல் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் 2006ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் படி விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உணவு பாதுகாப்புக்கு உரிமம் உண்டாஉணவு உற்பத்தியாளர்கள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் , விடுதிகள், டீக்கடைகள், திருமண மண்டபங்கள், குடிநீர் வாகனங்கள், பள்ளி கேண்டீன்கள், அன்னதானம் வழங்கும் வழிபாட்டு தலங்கள் இலவசமாகவோ, விற்பனைக்கோ உணவு பொருட்களை அளிப்போர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.நுகர்வோர்கள் பின்பற்ற வேண்டியவைவாங்கும் உணவு பொருட்களின் தரம் குறித்து விழிப்புண்வு இருக்க வேண்டும். பொட்டலமிடப்பட்ட உணவு பொருளின் லேபிளில் அனைத்து விவரங்களும் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என பார்த்து வாங்க வேண்டும்.கவனிக்க வேண்டிய…

Read More

பொங்கல் பரிசு; எம்.எல்.ஏ.,க்கள் வழங்கல்

ராஜபாளையம் : மாவட்டத்தில் சாத்துாரில் ராஜவர்மன் எம்.எல்.ஏ.,ஸ்ரீவி.,யில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., பொங்கல் பரிசு தொகுப்ப வழங்கலை துவக்கி வைத்தனர். ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் 16வது வார்டு குமரன் தெரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நகர துணை செயலாளர் பால்ராஜ், பொன்னுசாமி, முத்துகாளை, வனராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.சாத்துார்: சாத்துார் தொகுதிக்குட்பட்ட ராமுத்தேவன்பட்டி, ஏழாயிரம்பண்ணை , இ.ரெட்டியபட்டி, ஆலங்குளம், படந்தால், சேதுராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை ராஜவர்மன் எம்.எல்.ஏ. வழங்கினார். ஒன்றிய குழுத் தலைவர் ராமராஜ் பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகரச் செயலாளர் வாசன் மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள் ராஜேந்திரன், சங்கை வேல்முருகன், படந்தால், கனகராஜ்,கண்ணன், த.மா.கா. நகர தலைவர் அய்யப்பன் பங்கேற்றனர்.வத்திராயிருப்பு:…

Read More

பதவி ஏற்பு விழா

சிவகாசி : சிவகாசி ஜே.சி.ஐ., லயன் இயக்க மூன்றாம் ஆண்டு பதவி ஏற்பு விழா நடந்தது. ஆனையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். ஜே.சி.ஐ., மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். மண்டல பயிற்சியாளர் தனிவேல் பாண்டியன், முன்னாள் மண்டல துணை தலைவர் ஜெயந்தி பேசினர். சமூக சேவை அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மதன், ரகு, மலைராஜன் பங்கேற்றனர். பொருளார் கோவிந்தராஜ் ஏற்பாடுகளை செய்தார்.

Read More