சிதையும் சன்ஷேடுகள் பெயரும் நடைபாதை கற்கள் ; அவலத்தின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்

ஸ்ரீவில்லிபுத்துார் : சிறுமழை பெய்தாலே மழைநீர் தேங்கும் அவலம், சுகாதாரக்கேட்டில் கழிப்பறை, கொசுத்தொல்லை, சிதையும் சன்ஷேடுகள்,பெயரும் நடைபாதை கற்கள், இடநெருக்கடி என பல்வேறு அவலங்களின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் இருப்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் அதிகளவு நகர மக்களும், பல்வேறு கிராம மக்களும் வந்து செல்கின்றனர். இதோடு 200க்கு மேற்பட்ட அரசு ,தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. இது போன்று அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், காலை மற்றும் மாலையில் பீக்ஹவர்சில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பஸ் ஸ்டாண்டின் உட்புறம், சுற்றுப்பகுதியிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இடம் இன்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வெளி பகுதி ரோடு உயர்ந்துவிட்டதால் பஸ் ஸ்டாண்ட் தாழ்வாகி சிறுமழைக்கே குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. வணிகநிறுவனங்களின் கழிவுகள் சிதறி கிடக்கிறது. கழிப்பறையானது சுத்தமின்றி அவசரத்திற்கு கூட உள்ளே செல்லமுடியாதபடி அவதிபடுகின்றனர். கொசுத் தொல்லையால் குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறையை பெண்கள் பயன்படுத்தமுடியாதநிலை உள்ளது.சில கடைகளின் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்தும், சன்சைடுகள் சிதைந்தும் எப்போதும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. நடைபாதையிலோ சிமென்ட் கற்கள் பெயர்ந்து வருகிறது.

Related posts

Leave a Comment