சுத்திகரிப்பு குடிநீர் தரத்தை கண்டறிய எளிய வழி

உணவு பாதுகாப்புத்துறையின் பணி நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 2011ல் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் 2006ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் படி விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உணவு பாதுகாப்புக்கு உரிமம் உண்டாஉணவு உற்பத்தியாளர்கள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் , விடுதிகள், டீக்கடைகள், திருமண மண்டபங்கள், குடிநீர் வாகனங்கள், பள்ளி கேண்டீன்கள், அன்னதானம் வழங்கும் வழிபாட்டு தலங்கள் இலவசமாகவோ, விற்பனைக்கோ உணவு பொருட்களை அளிப்போர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.நுகர்வோர்கள் பின்பற்ற வேண்டியவைவாங்கும் உணவு பொருட்களின் தரம் குறித்து விழிப்புண்வு இருக்க வேண்டும்.

பொட்டலமிடப்பட்ட உணவு பொருளின் லேபிளில் அனைத்து விவரங்களும் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என பார்த்து வாங்க வேண்டும்.கவனிக்க வேண்டிய விவரங்கள் உணவின் பெயர், தயாரிப்பாளர் முகவரி, உட்பொருட்கள் மற்றும் சத்துக்கள் விபரம், சைவ அல்லது அசைவ குறியீடு, பேட்ச் எண், தயாரித்த அல்லது பேக் செய்த தேதி, எடை, காலாவதி தேதி போன்ற விவரங்களை பார்த்து வாங்க வேண்டும்.ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள்துரித உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்றவற்றை தவிர்க்க உணவில் குறைவான உப்பு, சர்க்கரை, கொழுப்பு வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும். புற்றுநோயை உண்டாக்கும் புகையிலையை தவிர்க்க வேண்டும்.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரத்தை எப்படி அறிவதுISI, fssai எண் அச்சிட்டுள்ள அடைக்கப்பட்ட பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்க வேண்டும். இவ்வாறு அச்சிடப்படாத குடிநீர் பாட்டில்கள், கேன் குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்.

நிறுவனத்திற்கு சான்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என ஆராய ISI, fssai இணையதளங்களில் உரிம எண்ணை பதிவிட்டு சரிபார்த்து கொள்ளலாம்.பாலிதீன் பையில் சூடான உணவு உண்பதால் ஏற்படும் பாதிப்பு ஜீரண உறுப்புகளை பாதித்து செரிமான சக்தியை குறைக்கிறது. பொதுமக்கள் முடிந்த அளவு சூடான உணவு பொருட்களை பார்சல் வாங்க செல்லும் போது பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும்.எந்தெந்த உணவுகளில் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகிறதுசர்க்கரை, தேன், மிளகு, பால், அதன் உபரி பொருட்கள், மிளகாய் பொடி, தேயிலை, காபித்துாள், பட்டாணி போன்றவற்றில் கலப்படம் செய்யப்படுகிறது.

இதை கண்டறியும் முறைகள்ஒரு கப் தண்ணீரில் பட்டாணியை போடும் போது பச்சை நிறம் ஏற்படுவது, மிளகை போட்டால் நீருக்குள் மூழ்காமல் மிதப்பது ஆகியவற்றின் மூலம் கலப்படத்தை கண்டறியலாம். தேயிலையை வடிதாளில் கழுவும் போது கறை இருப்பதும் கலப்படத்திற்கு உதாரணம்.கலப்படம் குறித்து எங்கு புகார் அளிக்கலாம்உணவின் தரம் பற்றிய புகார்களுக்கு 94440 42322 என்ற அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப், குறுந்தகவல் மூலம் தெரிவிக்கலாம். unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.

Related posts

Leave a Comment