ராஜபாளையம் : மாவட்டத்தில் சாத்துாரில் ராஜவர்மன் எம்.எல்.ஏ.,ஸ்ரீவி.,யில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., பொங்கல் பரிசு தொகுப்ப வழங்கலை துவக்கி வைத்தனர்.
ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் 16வது வார்டு குமரன் தெரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நகர துணை செயலாளர் பால்ராஜ், பொன்னுசாமி, முத்துகாளை, வனராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.சாத்துார்: சாத்துார் தொகுதிக்குட்பட்ட ராமுத்தேவன்பட்டி, ஏழாயிரம்பண்ணை , இ.ரெட்டியபட்டி, ஆலங்குளம், படந்தால், சேதுராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை ராஜவர்மன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஒன்றிய குழுத் தலைவர் ராமராஜ் பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகரச் செயலாளர் வாசன் மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள் ராஜேந்திரன், சங்கை வேல்முருகன், படந்தால், கனகராஜ்,கண்ணன், த.மா.கா. நகர தலைவர் அய்யப்பன் பங்கேற்றனர்.வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துாரில் மேட்டுத்தெரு, இந்திரா நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா வழங்கினார்.
வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டக சாலையில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ., உடன், நிலவள வங்கி தலைவர் முத்தையா, ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன் , அதிகாரிகள் பங்கேற்றனர். நரிக்குடி: ஆனைக்குளத்தில் ஒன்றிய துணைத் தலைவர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சரவணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. நரிக்குடி இருஞ்சிறை, கீழக்கொன்றைகுளத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன் தலைமையில் கூட்டுறவு சங்க தலைவர் அம்பலம், ஊராட்சி தலைவர் நாராயணன், சந்திரமூர்த்தி முன்னிலையில் வழங்கப்பட்டது.