விதிகளை மீறி குவாரிக்கு அனுமதி … பாதையை மறித்து விவசாயிகள் எதிர்ப்பு

விருதுநகர் : விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் கல் குவாரி அமைக்கும்முயற்சியை முறியடிக்கும் வகையில் பாதையை மறித்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கல் குவாரி அமைக்க வருவாய் துறை, கனிம வளத்துறை பரிந்துரைப்படி கலெக்டரிடம்அனுமதி பெற வேண்டும். விவசாயம், நீரோடை, நீர் வழித்தடம், நிலத்தடி நீர் மட்டம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாதது என வருவாய் துறையினர் கனிம வளத்துறையிடம் பரிந்துரைக்க வேண்டும்.அதன்படி குவாரி அமைக்கும் போது குவாரியை சுற்றிய கிராமங்களில் கிராம சபை மூலம் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்ற பின் தான் குவாரி அமைக்க வேண்டும் என்பது விதி.ஆனால் மாவட்டத்தில் இது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது ஏட்டளவிலே உள்ளது.

வருவாய் துறை,கனிம வளத்துறைகள ஆய்வு செய்யாமலே அனுமதி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது போன்றுதான் விவசாயம் நிறைந்த எரிச்சநத்தம் பகுதி தனியார் பட்டா நிலம் 20 ஏக்கரில் கல் குவாரி, எம்.சாண்ட், கிரஷ்ஷர் நடத்த வருவாய், கனிம வளம் பரிந்துரைப்படி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள் குவாரி செல்லும் பாதையை மறித்துள்ளனர்.

Related posts

Leave a Comment