200 எக்டேரில் ராமர் கரும்பு: அறுவடைக்கு ரெடி

விருதுநகர் : மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, எரிச்சநத்தம் பகுதியில் 200 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள ராமர் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயாராக உள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக சொல் வழக்கில் ராமர் கரும்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இனிப்புச்சுவை துாக்கலாக இருக்கும் இக்கரும்பை எட்டு மாதங்களுக்கு பின் அறுவடை செய்யலாம். கடித்து சுவைக்க எளிதாக இருப்பதால் இக்கரும்பு பண்டிகை காலங்களில் பிரதான இடம் வகிக்கிறது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, எரிச்சநத்தம், நடையனேரி உள்ளிட்ட பகுதிகளில் 200 எக்டேரில் ராமர் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.

பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் முழு கரும்பு தருவதற்காக புரோக்கர்களை தவிர்த்து விவசாயிகளிடம் அரசு சார்பில் கரும்பு ஒன்று ரூ.10க்கு நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையில் நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார்: இது போல் தைப்பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை பகுதி யிலிருந்து தினமும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பனங்கிழங்குகள் எடுக்கபட்டு பஜார் வீதிகளில் விற்பனை செய்யபட்டு வருகிறது. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100, பனங்கொட்டை யுடன் கூடிய கிழங்குகள் ரூ.125க்கு விற்கபடுகிறது.

Related posts

Leave a Comment