*#இராஜபாளையம் தொகுதி* முகவூர் ஊராட்சியை சார்ந்த *அபிநயா த.பெ தங்கராஜ்* என்பவருக்கு கவுன்சிலிங் மூலம் திருவள்ளூர் மாவட்டம் இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் *மருத்துவ படிப்பு* படிக்க இடம் கிடைத்துள்ளது ஆனால் கட்டணம் அதிகளவில் உள்ளதாகவும் வறுமையான குடும்பச் சூழ்நிலை உள்ளதாகவும் உதவி கோரி MLA அவர்களை இன்று (07.01.2021) நாடி வந்தார்கள் உடனடியாக நமது மக்கள் *MLA S.#தங்கப்பாண்டியன் அவர்கள்* கல்லூரி நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கி உதவிடுமாறு வலியுறுத்தினார் அதற்கு அவர்களும் உதவுவதாக கூறியுள்ளார்கள் அதனை தொடர்ந்து MLA அவர்கள் *#ரூ.25000 ஐ* வழங்கி சிறந்த முறையில் மருத்துவப் படிப்பை முடித்து ஏழை எளிய பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வாழ்த்தினார்.
Read MoreDay: January 8, 2021
அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்
அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்!ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில் DSP யாக பணி நியமனம் பெற்று வரும் நிலையில்.காவல்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ள அப்பா, டிஎஸ்பியான தன்னுடைய மகளை பார்த்தவுடன் சல்யூட் அடித்த நிகழ்ச்சி பெண்பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கு தன் பிள்ளைகள் உச்சத்தை தொடும் போது உணரும் ஆனந்தம் அளவில்லாதது என்பதை உணர்த்துவதாக அமைந்த புகைப்படம்.
Read Moreவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (08-01-2021) காலை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் நமது தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார் MP அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.. உடன் மாவட்ட ஆட்சியர் திரு.இரா.கண்ணன் IAS அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் மற்றும் அதிகாரிகள்.
Read Moreவிளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு எப்போது?
மதுரை மாவட்டத்தில் 215 அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய தலா ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.மத்திய அரசின் சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான உபகரணங்கள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் தலைமையாசிரியர்கள் உறுதி செய்து பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு (எஸ்.எம்.டி.சி.,) சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கொள்முதல் செய்ய வேண்டும். இந்நிதியை பள்ளிகளுக்கு விடுவிக்காமல் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் ‘லிஸ்ட்’டை மட்டும் உயர் அதிகாரிகள் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி மானிய தொகையில் ‘கோவிட் 19’ பொருட்களை சேலம் தனியார் கம்பெனியில் மட்டும் கொள்முதல் செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டது. தற்போது விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள்…
Read Moreராஜபாளையம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை
ராஜபாளையம், சத்திரப்பட்டி, சம்சிகபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் பெய்த மழையினால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உள்ளன. தற்போது பெய்த மழையினால் இன்னும் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை, அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா வரை பல்வேறு இடங்களில் வணிக வளாகங்களில் கடந்த மாதம் பெய்த மழையினால் நீரூற்று அதிகரித்து கசிவு ஏற்பட்டு நீர் வடிந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தினசரி நீரை அகற்றி வருகிறார்கள். அதேபோல தளவாய்புரம், சேத்தூர் மற்றும்…
Read Moreமாவட்டம் முழுவதும் 6 இடங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக சிஐடியு மறியல்
மத்திய அரசின் தனியார் மய கொள்கைளை கண்டித்தும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண், மின்சார சட்டங்களை கைவிட கோரியும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கண்டித்தும் விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலின் போது, மத்திய அரசின் தனியார் மய கொள்கைளை கண்டித்தும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண், மின்சார சட்டங்களை கைவிடக் கோரியும், தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றியதை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். விருதுநகர் பழைய பஸ்நிலையம் எதிரில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் வேலுச்சாமி, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தலைவர் வெள்ளைத்துரை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட 54 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி,…
Read Moreசிவகாசியில் போக்குவரத்து விதியை மீறியதாக 1.31 லட்சம் வழக்குகள் பதிவு
சிவகாசி காவல் கோட்டத்தில் நடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, சிவகாசி காவல்துறை கோட்டத்தில் நடந்த 2020ஆம் ஆண்டு 12 கொள்ளை வழக்குகளும் 30 திருட்டு வழக்குகளும் 12 கொலை வழக்குகளும் எட்டு கொலை முயற்சி வழக்குகளும் 43 அடிதடி வழக்குகள் 51 சாலை விபத்து வழக்குகளும், எழுபத்தாறு சாலை விபத்தில் காயமடைந்த வழக்குகளும், 26 கஞ்சா வைத்திருந்த வழக்குகளும் 41 பணம் வைத்து சீட்டு விளையாடிய வழக்குகளும் மதுபாட்டில்களை அனுமதியின்றி வைத்திருந்ததாக 426 வழக்குகளும், வெடிபொருள் சட்டத்தின் கீழ் 25 வழக்குகளும் 3 வழக்குகளும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு வைத்திருந்ததாக…
Read Moreவிருதுநகரில் பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
விருதுநகரில் ஒப்பந்த அடிப்படையில் பணியும் செவியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜேசு டெல் குயின் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற சங்க நிா்வாகிகள் கூறியது: கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மருத்துவப் பணிகள் தோ்வாணையத்தின் மூலம் போட்டித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் 13 ஆயிரம் செவிலியா்கள் பணியமா்த்தப்பட்டனா். 2 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி நிறைவடைந்ததும் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவா் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தும், தற்போது வரை 2 ஆயிரம் செவிலியா்கள் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா். மீதமுள்ள 11ஆயிரம் செவிலியா்கள் ஒப்பந்த…
Read Moreசாத்தூர் நகரில் ஒன்றிய கிளை கழக செயலாளர் ஆலோசனை
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் தலைமையில் அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றிய கிளை கழக செயலாளர் ஆலோசனை கூட்டம் சாத்தூர் நகரில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Read Moreகன மழையால் சூழந்த காட்டாற்று வெள்ளம்; கண்மாய்களில் உடைப்பால் தீவாக மாறிய குக்கிராமங்கள்
நரிக்குடி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளத்தால் நரிக்குடியில் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு குக்கிராமங்கள் தீவாக மாறியது . மாவட்டத்தில் துவக்கத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டிய நிலையில், அடுத்தடுத்து நிவர், புரெவி புயல்கள் தாக்கத்தில் மழை வெளுத்து கட்டியது. வடக்கு திசையில் இருந்து வேகமாக வீசும் காற்றால் வடகிழக்கு பருவமழை மேலும் பத்து நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டியது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நரிக்குடியை சுற்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் நான்கு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் உருவான காட்டாற்று வெள்ளம் கிராமங்களை சூழ்ந்து தீவுக்காடாக்கியது. நீர் வரத்து…
Read More