மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக சிஐடியு மறியல்

மத்திய அரசின் தனியார் மய கொள்கைளை கண்டித்தும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண், மின்சார சட்டங்களை கைவிட கோரியும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கண்டித்தும் விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியலின் போது, மத்திய அரசின் தனியார் மய கொள்கைளை கண்டித்தும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண், மின்சார சட்டங்களை கைவிடக் கோரியும்,

தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றியதை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

விருதுநகர் பழைய பஸ்நிலையம் எதிரில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் வேலுச்சாமி, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தலைவர் வெள்ளைத்துரை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகரில் மறியலில்

ஈடுபட்ட 54 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் மறியல் செய்த 48 பெண்கள் உட்பட 284 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவில்லிபுத்தூர் பஸ்நிலையம் அருகே நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், நகர செயலாளர் ஜெயக்குமார், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திருமலை உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர்.

சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நடந்த போராட்டத்திற்கு சிஐடியு நகர ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அங்கிருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து சிஐடியு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment