விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி NSS மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, சாலை பாதுகாப்பு குறித்த மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Read MoreDay: January 11, 2021
சேத்தூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது
சேத்தூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (வயது55), சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (27) ஆகியோர்களுக்கு சொந்தமான 3 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுபற்றி அவர்கள் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் நடத்திய விசாரணையில் சேத்தூர் கந்தசாமி (21), முகவூர் அருண்குமார் (22), பாலமுருகன் (20) உள்பட 5 பேர் சேர்ந்து இந்த மூன்று இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. பின்னர் நேற்று காலை போலீசார் இவர்களிடம் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து இவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Read Moreவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிக்கப்பட்ட 16,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,757 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 99 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,208 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 2, 700-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாதநிலை இருந்தது. மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாமதப்படுத்துவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் மாவட்ட சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை தாமதிப்பது ஏன்? என்று தெரியவில்லை. மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாமதிக்காமல் அறிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி…
Read Moreநடிகர் ரஜினிகாந்த்
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம். அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.-
Read More