சேத்தூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது

சேத்தூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (வயது55), சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (27) ஆகியோர்களுக்கு சொந்தமான 3 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுபற்றி அவர்கள் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் நடத்திய விசாரணையில் சேத்தூர் கந்தசாமி (21), முகவூர் அருண்குமார் (22), பாலமுருகன் (20) உள்பட 5 பேர் சேர்ந்து இந்த மூன்று இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

பின்னர் நேற்று காலை போலீசார் இவர்களிடம் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து இவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

Leave a Comment