கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

திருவில்லிபுத்தூரில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாயை திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருவில்லிபுத்தூர் சந்தை கிணற்று தெரு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் குறைந்தளவு தண்ணீர் உள்ளது. இந்நிலையில் இந்த கிணற்றுக்குள் நாய் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் நாய் தொடர்ந்து ஊளையிட்டு கொண்டிருந்தது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த நாயை கயிறு கட்டி மீட்டனர்.

Related posts

Leave a Comment